தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணி
Alliance for Development of Tamil Language, Culture and Heritage
எம்மைப்பற்றி
நாளைய சிந்தனை நோக்கிய செயற்பாடு
தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணியானது ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் சிறார்களிடையே தமிழ் மொழியை கற்பிப்பதற்கும், எதிர்வரும் காலங்களில் தமிழ் மொழி பண்பாடு மரபுரிமையை பேணிப் பாதுகாப்பதற்கும் தன்னார்வமாக இயங்கும் ஒரு தொண்டு நிறுவனம்.
தமிழ் சிறுவர்கள் அவரவர் வாழிட மொழியில் முதன்மைக் கல்வி கற்பதனால் . இரண்டாம் மொழியாக தமிழை கற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். இரண்டாம் மொழியாக கற்பதால் உள்ள சிக்கல்களை அறிந்து அவற்றிற்கேற்ப அடுத்து வரும் சந்ததியினரின் குழந்தைகளுக்கும் தமிழை கற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்துடன் இணையவழி மற்றும் செயலி ஊடாகவும் பயிலக்கூடிய வகையில் புதுப்பொலிவுடன் இயங்கும் அமைப்பாகும்.
நாம் உட்பட 14 நாடுகளின் கூட்டமைப்பான அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் பாடத்திட்டத்துடன் உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களை இணைத்து பயணிக்கின்றோம். மேலும் உலகளாவிய ரீதியில் தமிழ்ப் பாடநூல், பரீட்சைகள், கலைநிகழ்வுகள், போட்டிகள் ஊடாக தமிழ் மொழி கலை பண்பாட்டை வளர்ப்பதுடன் வெவ்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கும் எமது உறவுகளை தமிழால் இணைப்போம். எங்கள் குழந்தைகள் தமிழில் நன்றாக பேசவும் தமிழ் பண்பை அறிந்து சிறந்த மனிதர்களாக வாழவும் வழி அமைப்போம்.
Tamil Language and Cultural Alliance is a non-profit organization dedicated to teaching the Tamil language to Tamil children in the United Kingdom and to preserving Tamil in the future.
Because Tamil kids get primary education in their countries native language, they are compelled to learn Tamil as a second language. It is an innovative system that recognizes the problems of learning a second language and makes it possible to learn through online and with an improved curriculum.
Working Towards a Better Tomorrow
ABOUT US